Villupuram Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் 13ஆவது விழுப்புரம் மக்களவை தொகுதி ஆகும். 1971ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இது திண்டிவனம் தொகுதியாக இருந்தது. திண்டிவனம் தொகுதியில் காங்கிரஸ் ஆறு முறையும், திமுக 2 முறையும், மதிமுக 2 முறையும், பாமக ஒருமுறையும் வென்றது. தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் (தனி) தொகுதியானது.
தொடர்ந்து, 2009 மற்றும் 2014 தேர்தல்களில் அதிமுக அடுத்தடுத்து வென்ற நிலையில், 2019இல் திமுக கூட்டணயில் விசிக வேட்பாளர் வென்றார். விழுப்புரம் (தனி) மக்களவை தொகுதியில் திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை என ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் இதில் உள்ளன.
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண் வாக்காளர்கள்: 7 லட்சத்து 40 ஆயிரத்து 412 பேர்
பெண் வாக்காளர்கள்: 7 லட்சத்து 53 ஆயிரத்து 638 பேர்
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 209 பேர்
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14 லட்சத்து 94 ஆயிரத்து 259 பேர்
மேலும் படிக்க | உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?
கடந்த 2019 மக்களவை தேர்தல் - ஒரு பார்வை
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விசிக பொதுச்செயலாளர் டி. ரவிக்குமார் போட்டியிட்டு வென்றார். அவர் கடந்த தேர்தலில் 5 லட்சத்து 59 ஆயிரத்து 585 வாக்குகளை பெற்றார். இதன் வாக்குச் சதவீதம் 49.49% ஆகும். பாமக சார்பில் போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4 லட்சத்து 31 ஆயிரத்து 517 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். சுயேச்சை வேட்பாளராக கணபதி என்பது 58 ஆயிரத்து 19 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.
2024 வேட்பாளர்கள் யார் யார்?
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் டி. ரவிக்குமார் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் இம்முறை உதயசூரியன் சின்னம் இல்லாமல் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பாக்கியராஜ் மற்றும் பாமக சார்பில் எஸ். முரளி சங்கர் ஆகியோர் போட்டியிட்டனர். கட்சி சார்ந்த வேட்பாளர்கள் 6 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 11 பேரும் போட்டியிட்டனர்.
பதிவான வாக்குகள்
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் 76.52% வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் 11 லட்சத்து 50 ஆயிரத்து 164 வாக்குகள் பதிவாகின.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இந்த முறை உதய சூரியனில் போட்டியிடாமல் பானை சின்னத்தில் போட்டியிட்டதால் ரவிக்குமாரின் வெற்றி வாய்ப்பு சற்று மங்கியிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒருவேளை கடந்த முறை போல் உதயசூரியனில் போட்டியிட்டிருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாகியிருக்கும் என கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் பாமகவும் இணைந்திருப்பது அந்த அணிக்கு பலத்தை சேர்த்திருக்கிறது. இதில் அதிமுகவும் கடுமையாக போட்டியிடும். எனவே, யார் வெற்றி பெறுவார் என கூறவே முடியாது.
மேலும் படிக்க | மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: ECI இணையதளத்தில் காண்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ