ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது எஸ்.வி. மங்கலம் கிராமம். இங்கு சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அனைவருமே விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கு உள்ள கண்மாய் நீர் பாசனம் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
இந்த விவசாய நிலத்திற்கு கண்மாய் வழியாக சென்றுதான் விவசாயம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனிடையே, பருவ மழை காலங்களில் கண்மாயில் நீர் நிரம்பினால் விவசாயம் செய்வதற்கு சுமார் பத்து கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.இதனைக் கருத்தில் கொண்டு கண்மாயில் சிறிய பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் அலட்சியப் போக்காக அதைக் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலத்திற்கு முன்பே வைகை ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கண்மாய் நிரம்பி உள்ளது. தற்பொழுது விவசாயம் ஆரம்பிக்கும் நேரம் என்பதால் விவசாய நிலங்களில் உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர். மேலும் அடுத்த வாரம் இங்கு அமைந்துள்ள காவல் தெய்வமான சோனையா கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸூக்கு எதிராக மேல்முறையீடு; எடப்பாடி போடும் கணக்கு
இந்நிலையில், பாலம் அமைத்து தராமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மரக்கட்டைகளை வைத்து தற்காலிக பாலம் அமைத்து அதன் வழியே ஆபத்தான பயணம் மேற்கொண்டு விவசாய பணிகளை செய்து வருகின்றனர். எனவே உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையில் பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | கணவன் நடத்தையில் சந்தேகம்; ஆணுறுப்பு மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ