காஞ்சிபுரம் அருகே 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு

சிலையை ஆய்வுசெய்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் அவர்கள் இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதை உறுதி செய்துள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 20, 2022, 09:55 AM IST
காஞ்சிபுரம் அருகே 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு title=

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆர்ப்பாக்கம் கிராமம் இந்த கிராமத்தில் பிடாரி கோயில் செல்லும் வழியில் உள்ள காவாங்கரையில்  தலைகள் மட்டுமே தெரிந்து எஞ்சிய பகுதி புதைந்த நிலையில் இருந்த ஒரு சிலையை ஊர் பொதுமக்கள் பத்திரமாக தோண்டி எடுத்து சுத்தம் செய்து வைத்திருந்தனர். அந்த சிலையை ஆய்வுசெய்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் அவர்கள் இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதையும் இது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து கொற்றவைஆதன் கூறுகையில்:

மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையானது   4 அடி உயரத்தில் 3 அடி அகலத்தில் தனது மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் மூவரும் அமர்ந்த நிலையில்  கரண்ட மகுடத்துடன் கண்ணைக் கவரும் வகையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளுடன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்கள். 

மூத்த தேவியின் வலப்பக்கம் மாட்டுத் தலை கொண்ட அவரது மகன் மாந்தன் கையில் ஆயுதத்துடனும் இடப்பக்கம் அவரது மகள் மாந்தியும் வீற்றிருக்கிறார்கள். மூத்த தேவி தலையின் வலப்பக்கம் தூய்மையின் அடையாளமான துடைப்பமும் வலப்பக்கம் அவரின் சின்னமான காக்கை கொடியும் உள்ளது.

மேலும் படிக்க | பழமையான கோவில்களின் புணரமைப்பில் ‘அலட்சியம்’ வேண்டாமே!

மூத்த தேவினுடைய தலையில் கரண்ட மகுடமும் காதில் பத்ர குண்டலமும் கழுத்தில் சரப்பளி ஆபரணமும்  தோல்களில் வாகுவளையங்களும் கைகளில் வளையல்களும் பருத்த வயிறோடு விரிந்த கால்களும் இடையில் இருந்து பாதம் வரை நீண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையோடு 
புன்னகையான முகத்துடன் அழகிய புடைப்பு சிற்பமாக காட்சியளித்து கொண்டிருக்கிறார். 

தமிழகத்தில் தொண்டை மண்டலமாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமான மூத்த தேவி சிலைகள் உள்ளன அதிலும் குறிப்பாக இந்த சிலையில் மூத்த தேவியுனுடைய மகனும் மகளும் பெரிய உருவமாக அவருக்கு இணையாக காட்டப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News