மகளிர் உரிமைத் தொகை: கிராம நிர்வாக அலுவலர் மீது சரமாரி தாக்குதல்

மயிலாடுதுறையில் மகளிர் உரிமை திட்டத்தில் கணக்கெடுத்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 29, 2023, 08:17 PM IST
  • மகளிர் உரிமைத் தொகை
  • மயிலாடுதுறையில் தாக்குதல்
  • விஏஓ-க்கள் போராட்டம் அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகை: கிராம நிர்வாக அலுவலர் மீது சரமாரி தாக்குதல் title=

இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கும் மகளிர் உரிமை திட்டத்தில் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே தலைஞாயிறு கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் என்பவர் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். 

மேலும் படிக்க | மனைவி செய்த கொடூரம்..! படங்களை மிஞ்சும் ட்விஸ்டு..! ஆடிப்போன நாமக்கல் போலீஸ்!

தங்களது பெயர் விடுபட்டுள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் நேற்று கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரை நடுவழியில் மிரட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அலுவலகம் சென்று கொண்டிருந்த உதயகுமாரை முருகன் அவரது மகன் தீனதயாளன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தாக்கி உள்ளனர். மேலும் உனது வீட்டை அடித்து நொறுக்கி விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த உதயகுமார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் இன்று பிற்பகலுக்கு மேல் கணக்கெடுக்கும் பணி நடைபெறவில்லை. தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். திமுக அரசில்  அரசு ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வாடிக்கையாக உள்ளதை எடுத்துக்காட்டும் விதத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மணல்மேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | ஹெராயின் பறிமுதல்: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சம்மன்... அதிரடி காட்டும் என்ஐஏ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News