பள்ளி மாணவியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழக வெற்றி கழகம்!

மயிலாடுதுறை அருகே பள்ளியில் இருக்கும் கருப்பு போர்டை பச்சை நிறத்தில் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாற்றி கொடுத்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Feb 9, 2024, 08:53 AM IST
  • மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றம்.
  • தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அசத்தல்.
  • பள்ளிக்கு பச்சை போர்ட் கொடுத்துள்ளனர்.
பள்ளி மாணவியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழக வெற்றி கழகம்! title=

பள்ளியில் உள்ள கரும்பலகையை பச்சை நிறத்தில் மாற்றித்தர மாணவி நேற்று வைத்த வேண்டுகோளை நிறைவேற்றித்தந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கீழஆத்துக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி, மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில், மாணவ மாணவிகள் 100 பேருக்கு இனிப்பு, சுண்டல், முட்டை மற்றும் பால் ஆகிய ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில், மாணவி ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி முன்னிலையிலேயே, தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் பள்ளியில் உள்ள கரும்பலகையை பார்வைக்கு "பளிச்" என தெரியும் வகையில் பச்சை நிறத்தில் மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

மேலும் படிக்க | கருத்து கணிப்பை தாண்டி தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: திருச்சியில் கி.வீரமணி

இதையடுத்து, மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக அவர் மாணவியிடம் உறுதியளித்தார். இந்நிலையில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அப்பள்ளியில் பச்சை நிற பலகை அமைத்துத் தரும் பணியில் ஈடுபட்டனர். அப்பள்ளியில் உள்ள 7 வகுப்பறைகளில் பச்சை நிற பெயின்ட் அடித்துத் தந்து மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தினர். இதன்மூலம் விஜய் கட்சியில் சொன்னால் நமது நம்பிக்கை நிறைவேறும் என்ற எண்ணத்தை அக்கட்சியினர் மாணவர் சமுதாயத்தினரிடம் விதைத்துள்ளனர்.  மேலும் பள்ளியில் ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே கழிப்பறை உள்ளதால் ஏற்படும் சங்கடத்தை போக்க இருபாலருக்கும் தனித்தனியே கழிப்பறை கட்டித்தர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை கேட்டுக் கொண்ட கட்சியின் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமைக்கு தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதாக மாணவியிடம் உறுதியளித்தார்.

 

தல் ஆலோசனை கூட்டம்

கடந்த 2 ம் தேதி நடிகர் விஜய் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியாக அறிவித்திருந்தார்.  கட்சியாக அறிவித்து முதல் ஆலோசனை கூட்டம் சென்னை இசிஆர் பகுதியில் மறைமுக இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், நெல்லை,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், இளைஞரணி மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.  அதேபோல் கேரளா மாநிலத்தில் இருந்து 14 மாவட்ட தலைவர்கள், தொண்டரணி, இளைஞரணி உள்ளிட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள கொஞ்சம் தாமதமாக வந்த நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் மறைமுக இடத்தில் நடைப்பெற்றதால் ஆலோசனை கூட்டம்  நடைபெறும் இடம் தாமதமாக வந்த நிர்வாகிகளுக்கு தெரியாததால் நிர்வாகிகள் அனைவரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பல்வேறு தெருக்களிலும், சாலைகளிலும் ஏமாற்றமடைந்து அமர்ந்திருந்தனர்.  கடந்த 2 ம் தேதி நடிகர் விஜய் தன்னுடைய கட்சியை அறிவித்த நிலையில் முதல் ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் கலந்து கொள்ளாதது ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைமுக இடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர்களுக்கு உணவு பணையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பிரியாணி வழங்கப்பட்டது.  தொடர்ந்து எந்த இடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் என்ன மாதிரியான ஆலோசனைகள் வழங்கப்பட்டது குறித்து கேட்ட போது வாயையை திறக்கமால் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சென்றனர்.  வாயை திறந்து சொல்லும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி உள்ளனர்.  

மேலும் படிக்க | அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது -அதிமுக ஆர்.பி.உதயகுமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News