திமுக அரசை விமர்சித்து விஜய் ரசிகர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு!

"இன்று நீங்கள நேரு அரங்கத்திற்கு வருவதை தடுக்கலாம், ஆனால் நாளை உங்கள் கீழ் அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது" என  அரசை விமர்சித்து விஜய் ரசிகர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு.  

Written by - RK Spark | Last Updated : Oct 2, 2023, 12:59 PM IST
  • அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோ.
  • 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
  • அடுத்து டீசர் அல்லது ட்ரைலர் வெளியாக உள்ளது.
திமுக அரசை விமர்சித்து விஜய் ரசிகர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு! title=

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில்  நடைபெற இருந்தது, அதன் பின் பல்வேறு காரணங்களுக்காக இந்நிகழ்ச்சியை ரத்து செய்வதாக தயாரிப்பு நிறுவனம் திடீரென அறிவித்தது.  இதற்கு காரணம் நிகழ்ச்சிக்கான பாஸ் (அனுமதிச் சீட்டு) கோரி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்ததாக கூறப்பட்டது. இருப்பினும், நிர்வாக காரணங்களால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முடிவு சமூக மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் வேறு விதமாகவும் பேசப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் இசை வெளியீட்டு விழா நடைபெறாத தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், சுவரொட்டிகள் வழியாகவும் சர்ச்சையை கிளப்பும் வகையில் அரசை விமர்சித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சுட்டா போச்சி - விஜய் ரசிகர்கள்!

இந்நிலையில் மதுரையில் நேரடியாக தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது, அந்த போஸ்டர் சட்டமன்றம் அடங்கிய புகைப்படத்துடன் விஜய் இருப்பது போல் "இன்று நீங்கள் நேரு அரங்கத்திற்கு வருவதை தடுக்கலாம், ஆனால் நாளை உங்கள் கீழ் அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது" என்ற சர்ச்சையை கிளப்பும் வாக்கியங்களுடன் ஆன போஸ்டர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஒட்டி உள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

leo

இதே போல,  செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில், செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. "ஆடியோ லாஞ்ச் இல்லைனா...  என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி  என்ன நண்பா?". இளைஞர் அணி, தொண்டரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட அணிகள் தயார் நிலையில் உள்ளது. அண்ணா உங்களுடைய அதிரடி அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என இரண்டு போஸ்டர்கள் செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 5வது படமாக உருவாகியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே லியோ படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், வரும் வாரத்தில் 3வது சிங்கிள் அல்லது டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த சஸ்பென்சாக சில விஷயங்களை படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.  இதற்கான அறிவிப்பும் வரும் வாரங்களில் வெளியாக உள்ளது.

லியோ படத்திற்கு காலை சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்துதர வேண்டி திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசை கேட்டுக்கொண்டுள்ளது.  தற்போது தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜனவரி முதல் இந்த நடைமுறை தமிழகத்தில் இருந்து வருகிறது.  மற்ற மாநிலங்களில் காலை 4 மணி, 6 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி உள்ள நிலையில் தமிழகத்திலும் அனுமதி வழங்க கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தளபதி விஜய் சொன்ன முக்கிய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News