தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் 2024 -25 குறித்து விமர்சித்தார். அவர் பேசும்போது, " அமைச்சர் தங்கம் தென்னரசு அவருக்கே உரிதான தமிழ் நடையோடு தடையின்றி படித்தார் அதை தவிர வேறு ஒன்றும் இல்லை. மத்திய அரசு திட்டங்களில் இருக்கும் அதே மாதிரியான திட்டங்களை வைத்துக்கொண்டு அந்த நிதி உதவியோடு செயல்படுத்தும் திட்டங்களுக்கு புதிய பெயர் கொடுத்துள்ளனர். மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா கலைஞரின் கனவு இல்லம் என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது." என கூறினார்.
தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், அடையாறு ஆறு தூய்மை பணிகளை முதல்வரின் தந்தை காலத்தில் இருந்தே அறிவிப்பாக தான் உள்ளது. உலக பொருளாதார நிபுணர்களுக்கு அரசு கொடுத்த தொகை எவ்வளவு? என தெரியவில்லை. விஸ்வகர்மா திட்டத்தை வேறு பேரில் செயல்படுத்துகிறார்கள். இன்றைய நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசுக்கு எதிரான மனப்போக்கை தான் பார்க்க முடிகிறது. நீண்டகால கடன் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.
மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?
மத்திய அரசின் ஒரு சில திட்டங்களுக்கு புதிய பெயர்களை கொடுத்து இறுதியாக வருவாய் பெருக்கத்தினை அதிகரிக்க முடியாமல் மத்திய அரசு மேல் பழி போடுவதாக தான் பார்க்க முடிகிறது என கூறினார். தமிழகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகம் கடன் பெற்றுள்ளது. தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக இருந்தாலும் கூட பற்றாக்குறையான நிதி நிலை அறிக்கை உள்ளது. இன்றைய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை, மிகப்பெரிய நிதி சுமையின் காரணமாக ஓரளவுக்கு நிதி நிலைமை மேலாண்மையை கையாண்டு உள்ளது என கூறினார். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு கொடுத்திருப்பது, ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிகம் நிதி கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது போற்றப்படுகிறது என கூறிய அவர், சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசெ நடத்தாமல் ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
தொடர்ந்து பேசிய வேல்முருகன், மற்ற மாநில அரசுகளை போல தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை ஒன்றிய அரசிடம் கோரிக்கையாக வைத்து இருக்கிறது வேதனை அளிக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிற செவிலியர்கள், ஆசிரியர்கள், தோட்டக்கலைத்துறை மேலாண்மை துறையில் பணி செய்கிறவர்கள் பணி நிரந்தரம் குறித்து அறிவிக்கப்பட வேண்டும். இது அறிவிப்பில் இடம் பெறவில்லை. சம்பந்தப்பட்ட துறை மானிய கோரிக்கையின் போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ