இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!

Last Updated : Sep 4, 2018, 08:40 AM IST
இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்! title=

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!

இந்திய மீனவர்களின் 192 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிச் சட்டத்தின்மூலம் அரசுடமையாக்கப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 

இதனையடுத்து, இலங்கை அரசின் அவசர சட்டத்தை ரத்துசெய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென 11 மீனவ சங்கத்தின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Trending News