Tamil Nadu Latest News Updates: சென்னை அண்ணா அறிவாலாயத்தில் அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது துணை முதலமைச்சர் நியமனம் குறித்து தகவல் வெளியாகி வருவதை அடுத்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம். துணை முதலமைச்சர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவெடுப்பார் என்றும் முழுக்க முழுக்க முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவாகத்தான் இருக்கும். என்னை துணை முதலமைச்சராக்க வேண்டும் என தொண்டர்கள் நினைப்பது அவர்களின் விருப்பமாகும்" என்றார்.
பெரியாரை புறக்கணிக்க முடியாது...
மேலும் விஜய் நேற்று பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,"யாராக இருந்தாலும் பெரியாரைத் தொடாமல் இங்கு அரசியல் செயய முடியாது . பெரியாரை தொடாமலும் அவரை மீறியும் யாராலும் இங்கு அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியதை வரவேற்கிறேன், அவருக்கு வாழ்த்துகள்" என்றார்.
மேலும் படிக்க | தொண்டர்களின் உழைப்பு, வியர்வையால்தான் திமுக உயர்ந்து நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின்
அதற்கு அவர்,"எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம். துணை முதலமைச்சர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவெடுப்பார் என்றும் முழுக்க முழுக்க முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவாகத்தான் இருக்கும். என்னை துணை முதலமைச்சராக்க வேண்டும் என தொண்டர்கள் நினைப்பது அவர்களின் விருப்பமாகும்" என்றார்.
பெரியாரை புறக்கணிக்க முடியாது...
மேலும் விஜய் நேற்று பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,"யாராக இருந்தாலும் பெரியாரைத் தொடாமல் இங்கு அரசியல் செயய முடியாது . பெரியாரை தொடாமலும் அவரை மீறியும் யாராலும் இங்கு அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியதை வரவேற்கிறேன், அவருக்கு வாழ்த்துகள்" என்றார்.
மேலும் படிக்க | தொண்டர்களின் உழைப்பு, வியர்வையால்தான் திமுக உயர்ந்து நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. முதலில், ஆக. 15ஆம் தேதிக்கு முன் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டது. அதற்கடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்திற்கு முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், தொடர்ந்து இந்த தகவல்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேச்சு
அந்த வகையில், நேற்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருது வென்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது குறித்து விழா மேடையிலேயே பேசினார். "...அனைவருக்கு ஒரு கோரிக்கை உண்டு. இந்த மேடை தான் அதனை கேட்பதற்கு சரியான இடம் என்று நான் நினைக்கிறேன். உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என்றார்.
அதை தொடர்ந்து, இன்றும் அந்த தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினர். அனைத்து முடிவுகளும் முதல்வர் ஸ்டாலினின் கையில் இருப்பதாக உதயநிதி கூறியிருப்பதன் மூலம் விரைவில் இதுகுறித்து ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு உள்ளது. நேற்று எஸ்.எஸ். பழனிமாணிக்கம் மேடையிலேயே இதை பேசியது திமுகவுக்குள் துணை முதல்வர் பேச்சை இன்னும் பலமாக்கியுள்ளது. சீனியர்கள் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கு ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
மேலும் படிக்க | திமுக முப்பெரும் விழாவில் மு.கருணாநிதி உரை... ஏஐ மூலம் நடந்த அற்புதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ