ரஜினியிடம் கேள்வி எழுப்பிய சீமான்; பதில் அளிப்பாரா சூப்பர் ஸ்டார்?

கேள்வி எழுப்பிய சீமான்.. ரஜினி சரியான பதிலடி கொடுப்பாரா? என்று அவரது ரசிகர்கள் உட்பட அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 20, 2019, 11:32 AM IST
ரஜினியிடம் கேள்வி எழுப்பிய சீமான்; பதில் அளிப்பாரா சூப்பர் ஸ்டார்? title=

புது டெல்லி: புதிய குடியுரிமை சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறியுள்ளது. வன்முறையின் போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசுவதும் வாகனங்களுக்கு தீ வைப்பதும் அரங்கேறியது. மறுபுறம் காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தவும், வீடு, கல்லூரி போன்ற இடங்களில் புகுந்து வெளியே இழுந்து போட்டு தாக்குவதும், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசுவதும் மற்றும் துப்பாக்கி சூடு நடத்துவதும் போன்ற சம்பவங்களில் போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர். பல இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள போராட்டம் பெரும் கவலை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

CAA-வுக்கு எதிரான போராட்டம் ஆரம்பித்து ஓரிரு நாட்களுக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையை தெரிவித்துள்ளார். அவர் கூறியது, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கான வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடாக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போது நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் வன்முறைகள் என மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது எனப் பதிவிட்டுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், எந்த இடத்திலும் "குடியுரிமை திருத்த சட்டம்" என்று குறிப்பிடவில்லை. ரஜினியின் கருத்து பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த கேள்விகளுக்கு ரஜினி சரியான பதிலடி அளிப்பாரா? என்று அவரது ரசிகர்கள் உட்பட அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்! அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது எனப் பதிவிட்டுள்ளார்.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News