திமுக ஆட்சிக்கு வராமல் இருப்பதை அமமுக உறுதி செய்யும்: டிடிவு தினகரன்

டி.ஜி.பி மட்டுமல்ல, ஆயுதப்படைத் தலைவர்களும் கூட சசிகலாவை அதிமுக கொடியைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2021, 09:57 AM IST
  • விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆலோசனை.
  • அதிகபட்ச கட்டுப்பாட்டை இரு தரப்பும் கடைப்பிடிக்க வேண்டும் – மனித உரிமை ஆணையம்.
  • பேச்சுவார்த்தையே நிலையான தீர்வைத் தரும் – ஐ.நா.
திமுக ஆட்சிக்கு வராமல் இருப்பதை அமமுக உறுதி செய்யும்: டிடிவு தினகரன்  title=

தென்காசி: வி.கே.சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பதால் தனது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமமுக தலைவர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார். மேலும் தனது அத்தை தொடர்ந்து அவரது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவார் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

அதிமுக கொடியைப் பயன்படுத்திய சசிகலாவுக்கு எதிராக காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு அதிமுக தலைவர்கள் அளித்த மனு குறித்து கருத்து தெரிவித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் “டி.ஜி.பி மட்டுமல்ல, ஆயுதப்படைத் தலைவர்களும் கூட சசிகலாவை அதிமுக கொடியைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது. கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பதால் சசிகலா அந்தக் கொடியைப் பயன்படுத்துகிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜே.ஜெயலலிதாவின் படத்தை அமமுக கொடியில் பயன்படுத்துவதற்கும் அதிமுக (AIADMK) தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவரது படத்தைப் பயன்படுத்தியதற்காக எங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுக கொடி மற்றும் ஜெயலலிதாவின் படம் இரண்டையும் பயன்படுத்த ஆளும் கட்சி காட்டி வரும் எதிர்ப்பு ஏற்கத்தக்கதல்ல.” என்று கூறினார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராமல் இருப்பதை தனது ஆதரவாளர்கள் உறுதி செய்வார்கள் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் (TTV Dinakaran) மேலும் கூறினார். "நாங்கள் மீண்டும் தமிழகத்தில் ஒரு 'அம்மா' அரசாங்கத்தை அமைப்போம். முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும், முதலமைச்சரின் முடிவு உண்மையில் விவசாயிகளின் நலனை நோக்கமாகக் கொண்டதா அல்லது வெறும் தேர்தல் செயலுத்தியா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

ALSO READ: சசிகலா சென்னை வரும் தேதி மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!

இதற்கிடையில், பிப்ரவரி 8 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் சசிகலாவை (Sasikala) வரவேற்க தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் உள்ள அதிமுக தொண்டர்கள் 700 கார்களில் வேலூருக்கு பயணிக்க உள்ளதாக அமமுக மாவட்ட செயலாளர் பொய்கை மரியப்பன் தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா விடுதலை பெற்று பெங்களூரு அருகேயுள்ள ஹெப்பல் நகரில் தங்கியிருக்கிறார். கொரோனா தொற்று இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சசிகலா, விரைவில் தமிழகம் வருவார். அவரது வருகைக்காக அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்.

சிறை தண்டனை அனுபவித்து தமிழகம் திரும்பவுள்ள சசிகலாவின் விடுதலை பல விடுகதைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஜெயலலிதாவின் மிக நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அவர் முதல்வராய் இருந்த நேரத்திலேயே கட்சியில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார். பல ஆட்சி மற்றும் கட்சி தொடர்பான முடிவுகளை ஜெயலலிதாவுடன் சேர்ந்து அவரும் எடுத்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக தொண்டர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் சசிகலா கட்சியை கட்டிக்காக்கும் பொறுப்பை ஏற்றார். ஆனால், அதன் பின் அனைத்தும் அவருக்கு எதிராக மாறின. கட்சியில் அவருக்கு எதிராக குரல்கள் எழும்பின. அதே வேளையில், சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்தது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், சசிகலாவின் விடுதலை தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவுக்கு அதிமுக-வில் இடமில்லை என சில நாட்களுக்கு முன்னர் பழனிசாமி கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனினும், அரசியலில் எதுவும் நிலையானது அல்ல என்பது உண்மையே!!

ALSO READ: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த மேலும் 3 கட்சி நிர்வாகிகள் அதிமுக-விலிருந்து நீக்கம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News