சமரசம் பேச கூட ஆளுநரை சந்திக்கலாம்...ஸ்டாலினை விமர்சித்த டிடிவி தினகரன்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை  அடிக்கடி சந்திப்பது மக்கள் நலனுக்காகவா அல்லது திமுகவின் நலனுக்காகவா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.  

Written by - Chithira Rekha | Last Updated : Mar 15, 2022, 08:00 PM IST
  • ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு
  • சமரசம் பேச கூட ஆளுநரை சந்திக்கலாம்
  • ஸ்டாலினை விமர்சித்த டிடிவி தினகரன்
  சமரசம் பேச கூட ஆளுநரை சந்திக்கலாம்...ஸ்டாலினை விமர்சித்த டிடிவி தினகரன் title=

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு, 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளது. மேலும் பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மீது உடனடி நடவடிக்கை எனவும் ஆளுநரிடம் முதலமைச்சர் வலியுறுத்தியதாகவும், இறுதியாக தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Governor - CM Meet

மேலும் படிக்க | நீட் தேர்வு விலக்கு - மறுபரிசீலனை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு கோரிக்கை!

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த 
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  ஒருவேளை அமமுக - அதிமுக இணைப்புக்கான சூழல் வரும் பட்சத்தில் தொண்டர்களின் கருத்துகளுக்கேற்பவே முடிவெடுப்பேன் எனக் கூறினார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லங்களில் நடைபெறும் சோதனை காழ்ப்புணர்ச்சியா அல்லது தேவையான சோதனையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார். ஆளுநரை முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கடி சந்திப்பது மக்கள் நல பிரச்னைக்கா அல்லது திமுகவின் நலனுக்காகவா என்பதை பார்க்க வேண்டும் எனவும், ஏதாவது பிரச்னையில் சிக்கியிருக்கும் திமுக, சமரசம் பேசக்கூட ஆளுநரை சந்திக்கலாம் எனவும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.

மேலும் படிக்க | DMK எப்படி நமக்கு எதிரியோ, அதே போல் ADMK நமக்கு துரோகி: TTV

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News