'ஸ்டைல்' என நினைத்து மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் - அன்பில் மகேஷ்

பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதை ஸ்டைலாக நினைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 28, 2022, 03:35 PM IST
  • ஸ்டைல் என நினைத்து மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம்
  • மாணவர்கள் படிக்கட்டில் பயணித்தால் நடத்துனரகள் இறக்கிவிட வேண்டும்
  • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
'ஸ்டைல்' என நினைத்து மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் - அன்பில் மகேஷ் title=

புதுக்கோட்டை மாவட்டம் நாகமலை பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தென் மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் இந்த பயிற்சி விழாவில் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் மாணவர்களுக்கு குட் டச், பேட் டச் குறித்து புரிதல் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். 

மேலும் படிக்க | 10, 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும்: அன்பில் மகேஷ்

18 வயது பூர்த்தியடையாத மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தை கண்டவுடன் நடத்துனர்கள் பேருந்தை நிறுத்தி மாணவர்களை இறக்கிவிட்டு விட வேண்டும் என தெரிவித்த அவர், மாணவர்கள் குறித்த நேரத்தில் பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் பலனடைவார்கள் என கூறினார். ஆனால், சில மாணவர்கள் ஸ்டைலாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டார். 

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அனுப்புற ஆளுநரை சந்தித்து பேசியபோது, நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக கூறியுள்ளார். விரைவில் தமிழக முதல்வர் குடியரசு தலைவரை சந்தித்து பேசுவார், அதன் மூலம் நீட் தேர்வுக்கு நல்லதொரு முடிவு எட்டப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். ஒட்டுமொத்த தமிழக மக்களும் விரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விளம்பரத்திற்காக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சிப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மேலும் படிக்க | 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை: அன்பில் மகேஷ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News