கவலையில் பெண்மணிகள்! வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் வெள்ளி விலை

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டதுள்ளது. 

Last Updated : Feb 24, 2020, 11:36 AM IST
கவலையில் பெண்மணிகள்! வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் வெள்ளி விலை title=

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டதுள்ளது. 

 அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் 33 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று 4,072 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 28 ரூபாய் உயர்ந்து 4,100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 224 ரூபாய் உயர்ந்து 32 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராம் 50 காசுகள் உயர்ந்து, 52 ரூபாய் 90 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 500 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை மீண்டும் வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால், சுப முகூர்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்க நகை வாங்க வந்தமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News