பல்வேறு துறைக காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டாலும், ஆவின் மற்றும் போக்குவரத்துறை காலிப்பணியிடங்கள் அந்தந்த துறைகள் மூலம் நிரப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், அந்த துறைகளின் காலிப்பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
ALSO READ | டிவிட்டரில் வேலை கேட்ட திமுக எம்.பி
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும், அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்பு குறித்த சட்ட முன்வடிவை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார்.
ALSO READ | ஜனவரியில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்!
அவர் தாக்கல் செய்த இந்த சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு காலிப் பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வகையிலும், பல்கலைக்கழங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். பின்னர், 2021 - 22 ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளை அவர் பேரவையில் தாக்கல் செய்தார். அதில், அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவினங்களுக்காக 3 ஆயிரத்து 19 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 9 ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR