கொரோனா தொற்று பரவல் காரணமாக, சென்ற ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது அலையில் தாக்கும் குறைந்து வருவதை அடுத்து, இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த மாதம் முதல், 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் செப்டெம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, முறையான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், பள்ளிக்கு வருவது கட்டாயமாக்கப்படவில்லை. பள்ளிக்கு வர விரும்பாத, இயலாத மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
ALSO READ | Covishield: 84 நாள் இடைவெளி குறித்து மத்திய அரசு முக்கிய தகவல்..!!
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை, வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டன. ஆசிரியர்கள், பணியாளர்கள் , கல்லூரி மாணவர்கள் என அனைவரும் தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தி இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறந்த நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அரியலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது தவிர கடலூர் மாவட்டத்தில் மூன்று ஆசிரியர்களுக்கு தொறு உறுதியாகியுள்ளது.
ALSO READ | பருத்திக்கு 1 % சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
கொரோனா மூன்றாவது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில், பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ர சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “ செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து. அவர்களுக்கு இதற்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டது நல்ல விஷயம் தான் அவர்களுக்கு சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இது பரவாமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
மேலும், இந்தியாவில் எந்த பகுதியிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும், 17 வயது 18 வயதிற்குள் உள்ளமாணவர்கள்வர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசியுள்ளோம். அது குறித்த ஆய்வு நடத்தி வருகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேலும், தெரிவித்தார்.
ALSO READ | கரும்பு நிலுவை தொகைக்கு ரூ.182 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR