தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3வது அலை பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
ALSO READ | இன்று முதல் பள்ளிகள் திறப்பு! இந்த முக்கிய 10 விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், முதலில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை தொடங்கலாமா? இல்லை அனைத்து வகுப்புகளுக்கும் தொடங்கலாமா? என பரிசீலித்தாக கூறப்படுகிறது. அப்போது, தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், ஆண்டு இறுதித்தேர்வு மற்றும் மாணவர்களின் கல்வி நலன் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை என அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை நடத்தி, நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு; வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR