தமிழகத்தில் 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி கல்வித் துறை நேற்று வெளியிட்டது. தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) செய்தியாளர்களை சந்தித்து பிளஸ் 2 வகுப்பு முடிவுகளைப் பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டார்.
பிளஸ்-2 மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை ஆன்லைன் மூலமாக அறிந்து கொள்ள முடியும் என்றாலும், முறையாக வரும் 22-ம் தேதி மாணவர்களுக்கு மதிப்பெண் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை ஆன்லைன் மூலமாக அறிந்து கொள்ள முடியும் என்றாலும், முறையாக வரும் 22-ம் தேதி மாணவர்களுக்கு மதிப்பெண் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண்கள் குறித்த விபரங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் சேர்வதற்காக, மாணவர்கள் 26-ம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
மேலும், சி.பி.எஸ்.இ. (CBSE) தேர்வு முடிவுகளும் 31-ம் தேதிக்குள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. எனவே வரும் 26ம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதிவரை, பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் சேர்வதற்காக, விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மற்றும் செயல்முறைகள் தொடங்கும். இதற்கு அனைத்து கல்லூரிகளும் தயார் நிலையில் உள்ளன.
நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் தமிழக அரசு (TN Govt) அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மாணவர்கள் நாளை மறுநாள், அதாவது ஜூலை 22ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மதிப்பெண் வழங்குவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.
ALSO READ: TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: ரிசல்ட் பார்ப்பது எப்படி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR