சென்னை: தமிழ் நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
தற்போதுள்ள ஊரடங்கு 5 ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், அடுத்த கட்டமாக இது ஜூலை 12 வரை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 3 விதமான தளர்வுகள் நீக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- தமிழகம் முழுவதும் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- உணவகங்களில் 50% வாடிக்கையளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
-தேநீர் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி உண்டு.
- காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- எற்கனவே இரவு 7 மணி வரை இயங்கிய கடைகள் அனைத்தும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்குள்ளும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி
- குளிர் சாதன வசதியின்றி 50% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி
- உள்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ள தடங்களைத் தவிர மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்குத் தடை
- திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் அரசியல் கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.
#Lockdown #TNGovt #MKStalin pic.twitter.com/De46BWnzRh
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 2, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR