நிர்மலா சீதாராமன் தலைமையில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், லக்னோவில் நடந்தது. இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது குறித்து விவாதம் செய்யப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என எதிர்கட்சியாக இருந்த போது திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், இந்த ஜிஎஸ்டி (GST) கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து சமூக வலைதளத்தில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதற்கு அவர் தரப்பில் விளக்கப்பட்ட காரணத்தில், ஜிஎஸ்டி கூட்டத்திற்கு, தனக்கு தாமதமாக அழைப்பு வந்ததால், போக இயலவில்லை என்றும், மேலும் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதி அளித்திருந்ததாகவும் அவர் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
மேலும் கொரோனா காரணமாக, காணொலி காட்சி மூலமாகவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாவது அலை அச்சம் நிலவி வரும் வேளையில், காணொலி காட்சி மூலம் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்காததால், தான் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்ததாக விளக்கம் அளித்தார்.
இதற்கு, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்னங்கள் எழுந்தன. மக்கள் நலனை விட தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு தான் அமைச்சர் முக்கியத்துவம் கொடுக்கிறாரா என்ற வகையில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. மேலும் கொளுந்தியாவின் வளைக்காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அவர் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் எனவும் செய்திகள் பரவியது.
ALSO READ | பெட்ரோல் டீசல் GST-யின் கீழ் கொண்டு வரப்படுமா.. வெளியானது முக்கிய தகவல்!
இந்நிலையில், இன்று பதிவிட்ட தனது ட்விட்டர் பதிவில், எனக்கு கொழுந்தியாளே இல்லை என ஜிஎஸ்டி கூட்டம் தில்லியில் அல்ல லக்னோவில் நடந்தது என்றும் கூறியுள்ளார். இருப்பினும், கொளுந்தியா இல்லை என்றாலும், வேறு ஒருவரின் வளைக்காப்பு நிகழ்ச்சிக்கு போவதாக செய்தியாளர் கூட்டத்தில் கூறிய நிலையில், தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள, மக்கள் நலனை புறக்கணித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அதில் அவர் நாகரீகமான முறையில் விமர்சனம் செய்யாமல், அநாகரீகமான முறையில் வார்த்தைகளை பிரயோகித்திருப்பது குறித்தும், விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இப்போது பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது நடந்தால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள். பெட்ரோல் - டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டால் விலை 25% முதல் 30% சதவிகிதம் வரை குறையலாம். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் 70 -75 ரூபாய்க்கு கிடைக்கும்.
இது அமல் செய்யப்பட்டால், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இரண்டிற்குமே வருமானம் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR