சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான (TN Assembly Elections) வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டப்படி மே 2 ஆம் தேதி நடைபெறுமா? தள்ளி வைக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்படும் என வெளியான தகவல் உண்மை இல்லை. வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பதை குறித்து எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே திட்டமிட்டப்படி மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என சத்யபிரத சாகு (Sathya Pratha Sahoo) தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு (Voting Counting Centres) வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம். அதாவது அதிகாரிகள் 72 மணிநேரத்திற்கு முன்பாக ஆர்டிபிசிஆர் (RTPCR Test) பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளார்.
Election Commission of India bans all victory processions on or after the day of counting of votes, on May 2nd. Detailed order soon. pic.twitter.com/VM60c1fagD
— ANI (@ANI) April 27, 2021
தமிழகத்தில் மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி முதலில் தொடங்கும்.
தமிழநாடு, புதுச்சேரி, கேரளா போன்ற மூன்று மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. சட்டசபைத் தேர்தலின் போது பதிவான வாக்குகள் எண்ணிக்கை (Election Results Date) வரும் மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ALSO READ | தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு: ஐகோர்ட் பரிந்துரை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR