கொரோனா பரவல் எதிரொலி; தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது

தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 16, 2021, 04:34 PM IST
  • தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கொரோனா பரவல் எதிரொலி; தஞ்சை பெரிய கோவில்  மூடப்பட்டது title=

நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. 

இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் ( ASI) உள்ள கோவில்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை  உடனடியாக மூட மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில், தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர், கங்கை கொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில்கள் ஆகியவை மே 15ம் தேதி வரை மூடப்படுகிறது.

எனினும், கோயில்களில் ஆகமவிதிப்படி, தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம் போல் நடத்தப்படும் என அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்தனர்.  இது தவிர, தமிழகத்தில், மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில், இன்று  ஆலோசனை கூட்டமும்  நடைபெற்றது.

கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வது குறித்து, நேற்று மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

கொரோன பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும் என்று அந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

ALSO READ | சில மாநிலங்களில் சரியான திட்டமிடல் இல்லை, 9% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன: மத்திய அரசு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News