மக்கள் மகிழ்ச்சி: ஜெ., நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Last Updated : Feb 18, 2017, 05:09 PM IST
மக்கள் மகிழ்ச்சி: ஜெ., நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி title=

சென்னை: சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சட்டசபையில் இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவு அணியினர் மட்டுமே இருந்தனர். பரப்பரப்பான இந்த சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று  நடைபெற்றது. 

உறுப்பினர்கள் தலைகளை எண்ணி வாக்கெடுப்பு நடந்தது. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும், எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் வந்து ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் முதல் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசிய போது:-

தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். திமுகவினர் சட்டசபையை முடக்க நினைத்தனர். அவர்களின் எண்ணம் ஈடேரவில்லை என்றார். 

ஜெயலலிதா கண்ட கனவை, எம்ஜிஆர் கண்ட கனவை நனவாக்குவதுதான் எங்களின் லட்சியம் என்றார். சசிகலா மேற்கொண்ட சபதம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பழனிச்சாமி கூறினார். ஓபிஎஸ் அணியினர் திமுகவினருடன் ஐக்கியமாகிவிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

Trending News