குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
Tamil Nadu CM MK Stalin says he going to the spot of the military chopper crash involving CDS Bipin Rawat.
He says he has instructed the local administration to provide all the help needed in rescue operations. pic.twitter.com/mzI16onOdi
— ANI (@ANI) December 8, 2021
விபத்தில் சிக்கிய விமானப்படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ALSO READ: Live: முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நீலகிரி மலையில் விபத்து
இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் கோவையில் இருந்து 6 சிறப்பு மருத்துவக் குழுக்கள் சூலூர் சென்றுள்ளன.
ALSO READ:குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G