சொன்ன வாக்கை காப்பாற்றினார் முதல்வர் எடப்பாடி!!

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Last Updated : Jan 24, 2018, 12:19 PM IST
சொன்ன வாக்கை காப்பாற்றினார் முதல்வர் எடப்பாடி!! title=

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க சென்ற போது போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை சுட்டது யார் என்ற மர்மம் நீடித்து வந்த நிலையில், ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடன் சென்ற காவல் ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியில் இருந்துதான் குண்டு பாய்ந்துள்ளது என்றும், முனிசேகர் தவறுதலாக சுட்டதால்தான் பெரியபாண்டி உயிரிழந்ததாகவும் கூறியிருந்தது. 

நகை கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம், ராஜஸ்தான் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். நாதுராமை தமிழகம் கொண்டு வர தமிழக போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரியபாண்டியனின் மனைவியிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Trending News