தமிழக அமைச்சரவை மாற்றம்: யாருக்கு சிக்கல்? யாருக்கு வாய்ப்பு?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 30, 2023, 12:02 PM IST
தமிழக அமைச்சரவை மாற்றம்: யாருக்கு சிக்கல்? யாருக்கு வாய்ப்பு? title=

அமைச்சரவையில் மாற்றம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமயில் பதவியேற்ற தமிழக அரசு,  மே 7 ஆம் தேதி 2 ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு 2 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவிலான மாற்றம் என கூற முடியாது. அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டன. அடுத்து உதயநிதி ஸ்டாலின் புதியதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு அவருக்கு விளையாட்டு மேம்பாட்டு மற்றும் திட்டங்கள் செயலாக்கதுறை ஒதுகீட்டு செய்யப்பட்டிருக்கிறது. 

பிடிஆர் ஆடியோ சிக்கல்

அமைச்சரவை மாற்றத்தில் அடிப்படும் முதல் பெயர் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இவர் மீது ஏற்கனவே பல மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், கட்சி தலைவர் மற்றும் அவரின் குடும்பத்தை பற்றி பேசியதாக பாஜக வெளியிட்ட ஆடியோ அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆடியோ போலியானது என அவர் விளக்கம் அளித்திருந்தாலும், அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆர் பெயர் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அவருக்கு பதிலாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாம். 

மேலும் படிக்க | கூட்டணியில் சரிபாதி சீட் வேண்டும் - அண்ணாமலை போடும் கணக்குக்கு அதிமுக செவி சாய்க்குமா?

ஆவடி நாசர் - கயல்விழி செல்வராஜ் நீக்கம்?

அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகிய இருவரும் நீக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆவடி நாசர் துறையில் அண்மையில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தது. இது மாநில அளவில் பிரச்சனையாக உருவெடுத்தது மற்றும் உட்கட்சி விவகாரங்களால் அவர் நீக்கப்படலாம் என தெரிகிறது.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வேங்கை வயல் பிரச்சனையின்போது துறை ரீதியாகவும் வேகமாக செயல்படாதது கட்சிக்கு ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்டப்பெயரை பெற்றுக் கொடுத்தது. அப்போது இருந்து அவர் மீது அதிருப்தியில் இருக்கும் முதலமைச்சர் அவருக்கு பதிலாக சங்கரன் கோயில் தொகுதி எம்எல்ஏ ராஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளாராம். அதேநேரத்தில் அமைச்சரவையில் இருக்கும் ஒரே பெண் என்பதால் அவர் நீக்கப்படுவதற்கு பதிலாக வேறு துறைகள் ஒதுக்கீடு செய்யவும் வாய்ப்பிருக்கிறதாம். 

டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு 

திமுக ஆட்சி அமைந்ததும் வெளியான அமைச்சரவை பட்டியலிலேயே டிஆர்பி ராஜா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 2011, 2016, 2021 என தொடர்ச்சியாக மூன்று சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் அவருக்கு அமைச்சரவை கொடுக்க வேண்டும் என குரல்கள் எழுந்தது. அவரும் அதற்கான முயற்சியில் இருந்தார். ஆனால், அப்போது அமைதியாக இருக்குமாறு கூறியிருந்த முதலமைச்சர் இந்த அமைச்சரவை மாற்றத்தில் டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளாராம். 

சிக்கலில் இருக்கும் மற்ற அமைச்சர்கள்? 

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சிறுபான்மைத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோரும் அமைச்சரைவயில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவர் மீதும் புகார்கள் அதிகரிப்பதால், அமைச்சரவையில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கும் சீனியர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். 

மேலும் படிக்க | ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜகவினரின் தொடர்பு பற்றி விசாரணை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News