+2 தேர்வு முடிவு: இந்த ஆண்டும் மாணவிகளே முன்னிலை

Last Updated : May 12, 2017, 01:21 PM IST
+2 தேர்வு முடிவு: இந்த ஆண்டும் மாணவிகளே முன்னிலை title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டுள்ளன. 

பிளஸ் 2 தேர்வு முடிவில் இனி ரேங்குகள் முறை இருக்காது என நேற்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது. 

மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் 92.1% என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டை விட பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 0.7 அதிகம் ஆகும். மாணவர்கள் 89.3% தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 94.5% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி கொடுத்துள்ளன. இவற்றில் 292 அரசு பள்ளிகளும் அடங்கும்.

Trending News