TN Agri Budget 2021: தமிழக வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கலை தொடக்கினார். சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2021, 12:03 PM IST
TN Agri Budget 2021: தமிழக வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள் title=

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கலாகிறது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கலை தொடக்கினார். சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும்

இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை; கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும். 

தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம்

நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்; தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்

76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்

பனைவெல்லம் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும்.

இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் மத்திய - மாநில நிதியில் செயல்படுத்தப்படும்

வேளாண்மையின் மகத்துவத்தை தெரிந்துகொள்ளும் வகையில் மாநில அளவில் மரபுசார்பு வேளாண்மைக்கான அருங்காட்சியம் அமைக்கப்படும்

பழப்பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 80 லட்சம் பல்வகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்

கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்

இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் 

மழை நீர் சேகரிப்பு அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாசன பரப்பை வலுப்படுத்துதல்

சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டு பண்ணை முறையை ஊக்குவித்தல்

பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு

அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ25 லட்சம் செலவில் நெல் விதைகள் உற்பத்தி 

கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தை திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை 

கடலூரில் பலா சிறப்பு மையம் அமைக்கப்படும்.

சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 ஹார்ஸ் பவர் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70%  மானியத்தில் நிறுவப்படும். இந்த திட்டத்திற்கான செலவு  ரூ.114 கோடியே 68 லட்சம் 

Trending News