தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் அனல் காற்றின் தாக்கம் (காற்று வேகம் 40-50 கி.மீ) அதிகமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2019, 08:40 AM IST
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம் title=

தமிழகத்தில் கத்திரி வெளியில் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. சென்னை, வேலூர், திருத்தணி உள்ளிட்ட 11 நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி செல்சியஸை தாண்டு செல்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் வேலூரில் நிலவும் அதிக வெளியில் உள்ளூர் வாசிகளை வெளியே தலை காட்டமுடியா சூழலில் இருக்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் அனல் காற்றின் தாக்கம் (காற்று வேகம் 40-50 கி.மீ) அதிகமாக இருக்கும் எனவும், பொதுமக்கள் அடுத்த 3 நாட்கள் காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழக வட கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் எனவும் கூறியுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் மே 19, 20-ஆம் தேதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சூழல் கனியக்கூடும் என கணிக்கப்பட்டது. ஆனால், அடுத்த வாரம் முதலே தென்மேற்கு பருவமழை துவங்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

பொதுவாக, தென்மேற்கு பருவமழை மே இறுதி வாரத்தில் துவங்கும். ஆனால் இம்முறை மழை துவங்க ஜுன் 6-ஆம் தேதி வரை ஆகலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழைக்கு கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Trending News