சென்னை: ஒவ்வொரு மாதமும் தங்கள் தொகுதி மக்கள் பிரச்னைகள் குறித்த அறிக்கையை என்னிடம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டம்; கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு மையம்; நீட் தேர்வால் இந்த ஆண்டு மூன்று மாணவிகள் பலி. தலைநகர் முதல் குக்கிராமங்கள் வரை குடிநீர் பிரச்னை. இதுபோல தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் பற்றி பிரதமருக்கும் கவலை இல்லை; மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கவலை இல்லை.
"#Hydrocarbon திட்டம்; கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு மையம்; #NEET; தலைநகர் முதல் குக்கிராமங்கள் வரை குடிநீர் பிரச்னை.. இதுபோல தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் பற்றி பிரதமருக்கும் கவலை இல்லை; மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கவலை இல்லை"
- தலைவர் @mkstalin அவர்கள் உரை. pic.twitter.com/tJTe8U07Ht
— #DMK4TN (@DMK4TN) June 13, 2019
திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் தங்கள் தொகுதி மக்கள் பிரச்னைகள் குறித்த அறிக்கையை என்னிடம் வழங்க வேண்டும். இது வேண்டுகோள் இல்லை; கட்டளை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
”திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் தங்கள் தொகுதி மக்கள் பிரச்னைகள் குறித்த அறிக்கையை என்னிடம் வழங்க வேண்டும். இது வேண்டுகோள் இல்லை; கட்டளை!”
-கழக தலைவர் @mkstalin அவர்கள் உரை.#DMK4TN pic.twitter.com/ReNMvjeP4h
— #DMK4TN (@DMK4TN) June 13, 2019
மேலும் இன்று திமுக தலைவர் ஸ்டாலின், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
"கழக தலைவர் @mkstalin அவர்கள், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்"#DMK4TN pic.twitter.com/ISk7ptzcm2
— DMK (@arivalayam) June 13, 2019