பரிவார்களின் பலி ஆடுகளா பாவலர் சகோதரர்கள் - திருமாவளவன்

பரிவார்களின் பலி ஆடுகளா பாவலர் சகோதரர்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 4, 2022, 04:51 PM IST
  • கங்கை அமரனுக்கு திருமாவளவன் கண்டனம்
  • பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய கங்கை அமரன்
  • இளையராஜா விவகாரத்தி திருமாவளவன் கேள்வி
பரிவார்களின் பலி ஆடுகளா பாவலர் சகோதரர்கள் - திருமாவளவன் title=

அம்பேத்கருடன் மோடியை இளையராஜா ஒப்பிட்டு எழுதியதற்கு தமிழ்நாட்டில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஆனால் தனது கருத்திலிருந்து இளையராஜா பின்வாங்கவில்லை.

இந்தச் சூழலில் இளையராஜாவின் சகோதரர் கங்கை தனியா யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் நடந்துகொண்ட விதம் முக சுளிப்பை ஏற்படுத்தியது. 

Gangai Amaran

அவருக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒப்பீடு செய்வதில்  இருவகை உண்டு.

1.நேர்மறை ஒப்பீடு 2.எதிர்மறை ஒப்பீடு

கரும்பு இனிக்கும் ;
கனிகள் இனிக்கும் -
இது நேர்மறை

கரும்பு இனிக்கும் ;
வேம்பு கசக்கும் -
இது எதிர்மறை

 

அம்பேத்கர் ; பெரியார் -
இது நேர்மறை. 
அம்பேத்கர் ; மோடி- 
இது எதிர்மறை. 

 

அம்பேத்கரும் மோடியும் எதிர் எதிர் துருவங்கள். எனவே இருவரையும் நேர்மறையாக ஒப்பிட முடியாது. அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி.

மேலும் படிக்க | திமுகவை ஆன்மீகத்துக்கு எதிரான கட்சி என சித்தரிக்க முயற்சி..சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு

முழுமையாய் அவரை விழுங்கத் துடிக்கும் சங்கத்துவக் கும்பலின் சதிச்செயல். பாவலரின் சகோ'க்கள்  பரிவார்களின் பலி ஆடுகளா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | தென்காசியில் பரபரப்பு - அதிமுக பிரமுகரின் தந்தை கொடூர கொலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News