விஜய்க்கு அந்த நோக்கம் இருக்கத்தான் செய்யும் - மதுரையில் திருமா பேட்டி!

திமுக என்னுடைய முதல் எதிரி என்று விஜய் பேசுகிறார். ஆதவ் அர்ஜுன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு வரும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Dec 8, 2024, 07:00 PM IST
  • விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார்.
  • ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
  • மதுரையில் திருமாவளவன் பேட்டி.
விஜய்க்கு அந்த நோக்கம் இருக்கத்தான் செய்யும் - மதுரையில் திருமா பேட்டி! title=

கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மதுரைக்கு வந்த நிலையில், தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என விஜய் நினைக்கிறாரா என்ற கேள்விக்கு, விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவருக்கும் அந்த நோக்கம் இருக்கத்தான் செய்யும். அவர் வெளிப்படையாகத்தான் அதை பேசுகிறார். திமுக என்னுடைய முதல் எதிரி என்று தானே பேசுகிறார். ஆதவ் அர்ஜுன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அறிவிப்பு வரும் என கூறினார்.

மேலும் படிக்க | அகம்பாவம், ஆணவம் இல்லை! திமுகவிற்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்!

முன்னதாக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரைக்கு செல்லும் போது செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, விடுதலை சிறுத்தைகள் மதசார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளது. புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை. திமுக கூட்டணி கட்டுப்பாடு இல்லாமல் சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள சதி திட்டமாக இருக்கும் அதிமுக, பாஜக அவர்களை நோக்கம் தொடர் வெற்றி பெற்றுள்ளதால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை குறி வைப்பதை விட இந்த கூட்டணியில் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாக பயன்படுத்தலாம் என சிலர் முயற்சிக்கிறார்கள்.

கூட்டணிக் கட்சியில் எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை அதற்கான சூழ்நிலையும் இல்லை. திமுக அழுத்தம் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் ஆரம்பத்திலேயே அதில் பங்கேற்க மாட்டேன் என சொல்லி இருப்பேன். அது ஒரு யுகங்களாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. நான் சுயமாக எடுத்த முடிவு. விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு விஜய் திமுக அரசை முதன்மையான எதிரிகள் என்று வெளிப்படையாக வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் வரும் நானும், விஜயும் அரசியல் பேசாமல் நூல் வெளியீட்டு விழாவில் இருந்தால் கூட அதை அரசியலாக்குவார்கள் இதற்கான பலர் காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை. விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதும் மகிழ்ச்சி.

சூதாட்டம் ஆட விரும்புகிறவர்கள் தமிழக அரசியல் களத்தில் கலவரத்தை உருவாக்குவார்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். துணை பொதுச் செயலாளர்கள் பத்து பேரில் ஒருவர் ஆதவ்அர்ஜுனா. அப்படி ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறும் போது கட்சிக்கு ஊறு விளைவிக்கிற வகையில் செயல்படும்போது தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதிக்க வேண்டும் என்பது நடைமுறை. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை என்று வருகிற போது உயர்நிலைக் குழு கவனத்திற்கு சென்று அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரு நடவடிக்கையாக கொண்டுள்ளோம்.

இது முழுமையான அரசியல் கட்சி ஆவதற்கு வேளச்சேரி தீர்மானம் என்பதை நாங்கள் நிறைவேற்றினோம். தலித் அல்லாதவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தலைவரின் கடமை. ஆகவே ஆதவ் அர்ஜூனின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் அதை தலைமை கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று முன்னணி தோழர்களுடன் கலந்து பேசினோம். தொடர்பான முடிவு விரைவில் வரும். என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை அதற்கான சூழல் இல்லை. அது முடியாமதாசுக்கு ஒரு அஜெண்டா கொடுத்திருக்கிறார்கள் அதை படி பேசுகிறார்.

மேலும் படிக்க | ரூ. 3 லட்சம் வரை கடன்... தமிழக அரசின் புதிய திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு உண்டு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News