கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை உள்பட தமிழகம் (Tamil Nadu) முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயன்றாலும் தினமும் சுமார் 25,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் (Coronavirus) பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ALSO READ | ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கிய காவலர்
அந்தவகையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பல்வேறு தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தாராளமாக நிதிகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.
இதைத்தொடா்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (Chief Minister Relief fund) பலா் நிதியளித்து வருகின்றனா். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளது. சென்னை தலைமைச்செயலத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து இதற்கான கசோலையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் (Thirumavalavan) வழங்கி உள்ளார்.
On behalf of the 2 #VCK_MPs and the 4 #VCK_MLAs, we presented a cheque for Rs.10 lakhs to the Hon'ble Chief Minister @mkstalin today evening as our contribution towards the CM Relief Fund for fighting Covid-19.
#CMReliefFund pic.twitter.com/jGajkZ5hra— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 14, 2021
ALSO READ | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம்
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR