தமிழகத்தின் மொத்த COVID-19 எண்ணிக்கை 4.5 லட்சத்தை தாண்டியுள்ளது

தமிழகத்தில் மேலும்  புதிதாக 5,976 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 5, 2020, 08:29 AM IST
  • மொத்த கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,51,827
  • மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கையை 7,687
  • சென்னையில் மட்டும் 12,003 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தின் மொத்த COVID-19 எண்ணிக்கை 4.5 லட்சத்தை தாண்டியுள்ளது title=

Coronavirus in Tamil Nadu: தமிழகத்தில் மேலும்  புதிதாக 5,976 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி 51,633 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல நேற்று 79 இறப்புகளுடன், மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கையை 7,687 ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது நாளாக, சென்னையில் 1000 க்கு கீழே 992 ஆகவும், 12 பேர் தொற்றுநோயால் மரணம் அடைந்துள்ளனர். சென்னையின் மூன்று அண்டை மாவட்டங்களில் 784 புதிய கொரோனா பாதிப்பும் (Coronavirus), கோயம்புத்தூர் மற்றும் கடலூரும் சேர்ந்து 1,094 புதிய நோய்த்தொற்றுகள் உறுதியாகின.

எட்டு மேற்கு மாவட்டங்கள் (Western Districts) 23 சதவீதக்ம் என 11,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல 10 தெற்கு மாவட்டங்களில் 7,147 பேரும்,  எட்டு மத்திய மாவட்டங்களில் 5,437 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

ALSO READ |  டிசம்பர் வரை அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்: தமிழக அரசு!!

சென்னையில் மட்டும் 12,003 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பேட்டை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 5,642 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவையில் அதன் மொத்த தொற்றுநோய்களில் 25% இன்னும் சிகிச்சையில் உள்ளது. ஈரோடில் 32%, திருப்பூரில் 31% மற்றும் சேலத்தில் கிட்டத்தட்ட 29%, மதுரை 6% பேர் சிகிச்சையில் உள்ளன. பெரம்பலூர் (102), தர்மபுரி (187), சிவகங்கை (203) ஆகியவை மாவட்டங்கள்  மாநிலத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான நோய்தொற்று பாதிப்பை கொண்டிருந்தன.

வெள்ளிக்கிழமை 81,588 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. மாநிலத்தில் சராசரி நேர்மறை விகிதம் 9.1% ஆகும். இறப்பு விகிதம் 1.7% ஆக இருந்தது. 

ALSO READ |  லாக்டௌன் விதிகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு: அரசியல் விளையாட்டு ஆரம்பம்!!

வெள்ளிக்கிழமை, 11 வடக்கு மாவட்டங்களில் 3,150 புதிய நோய்பாதிப்பு ஏற்பட்டுள்ளன. சென்னையின் அண்டை மாவட்டங்களான செங்கல்பேட்டில் 370, காஞ்சிபுரத்தில் 154, திருவள்ளூரில் 260 புதிய நோய்தோற்று பதிவாகி உள்ளன. சென்னை மற்றும் அதன் மூன்று அண்டை மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் கடலூரில் 499, திருவண்ணாமலையில் 216, கல்லக்குரிச்சியில் 182 பேர் உட்பட 1,374 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டன.

கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டத்தில் 595 பேர் பாதிப்பு. மேற்கு பிராந்தியத்தில் எட்டு மாவட்ட புதிதாக 1,328 பேருக்கு தொற்று. சேலம் 239 ஐயும், ஈரோடு 121 பேர் பாதிப்பு. சேலத்தில் ஐந்து பேர் உட்பட இப்பகுதியில் 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.

10 தெற்கு மாவட்டங்களில் (Southern Districts) மதுரை 123, திருநெல்வேலியில் 114, கன்னியாகுமரியில் 107 உள்ளிட்ட 813 புதிய தொற்று சேர்க்கப்பட்டுள்ளன. எட்டு மத்திய மாவட்டங்களில் 679 புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவற்றில் தஞ்சாவூரில் 164, திருச்சியில் 104 மற்றும் புதுக்கோட்டையில் 102 ஆகும். தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 17 மற்றும் 7 பேர் உயிரிழந்தனர்.

Trending News