மாநிலங்களவை சீட் எனக்கு ஒதுக்கப்பட்டது; MDMK-க்கு இல்லை: வைகோ

நான் மாநிலங்களவை எம்.பி ஆக வேண்டும் என்பதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jul 8, 2019, 12:42 PM IST
மாநிலங்களவை சீட் எனக்கு ஒதுக்கப்பட்டது; MDMK-க்கு இல்லை: வைகோ title=

நான் மாநிலங்களவை எம்.பி ஆக வேண்டும் என்பதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். 

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைகோ மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் வைகோ மனுவை நிராகரிக்க பிறக்கட்சிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளது என்பதால் வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று ஏற்பாடாக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்  என்.ஆர்.இளங்கோ போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இதை தொடர்ந்து, திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " மக்களவை தேர்தல் நேரத்தில், திமுக கூட்டணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது, மாநிலங்களவையில் நான் எம்.பி.யாக போட்டியிடுவதாக இருந்ததால் தான் ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவை சீட் எனக்குதான் ஒதுக்கப்பட்டது; மதிமுகவுக்கு இல்லை என வைகோ தெரிவித்தார். 

தேசத்துரோக வழக்கில் தண்டனை கிடைக்கும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றும், ஏனெனில் சுதந்திர இந்தியாவில் இதுபோன்றதொரு தண்டனை யாருக்கும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். நான் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், மாற்று ஏற்பாட்டை செய்யுமாறு ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினேன். நான் எம்பி ஆவதாக இருந்தால் சீட் ஒதுக்கீடு செய்வதாக ஒப்பந்தத்தின் போது ஸ்டாலின் கூறினார். 

மேலும், நான் எம்.பி ஆக வேண்டும் என்பதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் எனவும், தீர்ப்பு வருவதற்கு முந்தைய தினம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தீர்ப்பை பொறுத்து மாற்றுஏற்பாடு செய்து கொள்ளும்படி நான் தான் வலியுறுத்தியதாகவும் வைகோ கூறினார்.

 

Trending News