பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை: MKS

பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமையை ஏற்படுத்தும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட்....

Last Updated : Aug 18, 2019, 10:06 AM IST
பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை: MKS title=

பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமையை ஏற்படுத்தும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட்....

பால் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், வரும் 19 ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பசுந்தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை 4 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக அதாவது 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக, அதாவது 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து வினியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் கூட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு வரும் 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பால் விலை உயர்வு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; பால் விலை உயர்வு என்பது ஏழை & நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை!

தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா?..... கடமை தவறிய அதிமுக அரசு, சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா?" என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

Trending News