மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில், வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் என்.மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், பாஜகவின் கரு.நாகராஜனும் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.
ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இடைத் தேர்தலில் பாஜகவின் சார்பாக இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன் போட்டியிட இருந்தார்.ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக கரு.நாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கங்கை அமரன் போட்டியிட மறுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை. யார் நல்லது செய்வார்கள் என யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் ஏற்கனவே பணப்பட்டுவாடா காரணமாகவே தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. என்பது குறிபிடத்தக்கது.