மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா! விழாக்கோலம் பூண்டுள்ள பெரிய கோவில்!

மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா தஞ்சாவூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 3, 2022, 02:16 PM IST
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா! விழாக்கோலம் பூண்டுள்ள பெரிய கோவில்! title=

மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா தஞ்சாவூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சோழ பேரரசு காலத்தில் கிபி 1003 முதல் 1010 வரை கட்டப்பட்ட இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்த பின்னரும் தமிழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.நேற்று தொடங்கிய இந்நிகழ்வில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து திருமுறைகள் பாடப்பட்டு மங்கள வாத்தியங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து மாமனார் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தர்மபுரம் ஆதீனம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாமன்னர் ராஜராஜ சோழனால் பாதுகாக்கப்பட்ட திருமுறைகள் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு ராஜ வீதிகளில் யானை மீது ஊர்வலமாக வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரியநாயகி மற்றும் பெருவுடையாருக்கு பேராபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மாலை 3 மணி முதல் மேடை நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன. இன்று மாலை வரை பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். முன்னதாக, கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கவியரங்கம், பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற்றது. காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஓதுவார்களின் வீதியுலா நடைபெற்றது.

சதய விழா கொண்டாடப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜராஜ சோழன் சிலை அமைந்துள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஒரு வழி சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News