தேமுதிக கூட்டணியில் இணைய இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது: தமிழிசை!!

விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க நாளை பியூஷ் கோயல் சென்னை வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Feb 23, 2019, 04:29 PM IST
தேமுதிக கூட்டணியில் இணைய இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது: தமிழிசை!! title=

விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க நாளை பியூஷ் கோயல் சென்னை வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. 

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பாஜக தலைவர் தமிழிசை சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கான காரணம், அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறியவும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக  தகவல் தெரிவிக்கின்றன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை கூறியதாவது; விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க நாளை பியூஷ் கோயல் சென்னை வருகிறார்; தேமுதிக கூட்டணியில் இணைய இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

 

Trending News