போராடுவோர் தமிழக வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!
ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9 நாட்களாக தீவிரமடைந்த போராட்டம் நேற்று சற்று தணிந்து பல ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
இதையடுத்து, நேற்று காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாவிட்டால் 17B-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கைவிடுத்திருந்த நிலையில், தற்போது இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளித்துள்ளது. ஆனாலும், போராட்டம் தொடர்ந்து நீடித்ததால் நேற்று இரவு வரை பணிக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அவகாசமா அளித்தது.
மேலும், இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என பள்ளி கல்வி துறை அறிவித்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆசிரியர்களும், அரசும் எடுக்கும் முடிவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.