தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது... கோவை , நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ | 7th Pay Commission: 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 62,000 சம்பளத்தில் வேலை!
மேலும், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பகுதிகளில் 5 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தளவில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம், குளச்சல் முதல், கேரளா, குஜராத் வரை குமரி கடலில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முட்டம் முதல் தேங்காய்பட்டணம் வரையிலான மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.