துரோகங்கள் வென்றதாக சரித்திரம் இல்லை; துரோகங்கள் வீழும் என்பதே வரலாறு என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர்.
இது குறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்ககோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தமிழக கவர்னரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து இனதவலகானது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் இவ்வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை திருவெற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது..!
11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அதிக அரசு செயல்பட்டு வருகிறது. துரோகங்கள் வென்றதாக சரித்திரம் இல்லை; துரோகங்கள் வீழும் என்பதே வரலாறு என்று பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசிய போது, தகுதிநீக்கப்பட்ட 18 பேரை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தினகரனையோ, அவரைச் சார்ந்தவர்களையோ எந்தக் காலத்திலும் நாங்கள் சேர்க்கமாட்டோம். மாற்றான் தோட்டமாக இருந்தாலும் மதிக்கும் பண்பை பெற்றவர்கள் நாங்கள் என தெரிவித்துள்ளார்.