தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி தனிச் சின்னத்தில் போட்டி!!

புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்காசி தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Mar 17, 2019, 04:26 PM IST
தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி தனிச் சின்னத்தில் போட்டி!! title=

புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்காசி தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்!!

சென்னை: தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்த நிலையில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், புதிய தமிழகம் கட்சிக்கு  தென்காசி(தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென்காசி தொகுதியில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணசாமி, திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Trending News