தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு மக்கள் தங்களால் முடிந்தவைகளை செய்துகொள்கின்றனர்.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மாதிரியான வெப்பநிலை பதிவாகும். சூரியக்கதிர்கள் நேரடியாக வீசக்கூடிய காலகட்டத்தில் தரைக்காற்று அதிகமாக இருக்கும்.அதனால் வெப்பம் அதிகரிக்கிறது.
காற்றின் ஈரப்பதம், காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து வெப்பநிலை அதிகரிக்கிறது. கணினியின் தரவுகளை வைத்து அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு 3 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு காற்றின் ஈரப்பதம் ஒரு முக்கியமான விஷயமாக உள்ளது. காற்றின் திசைவேகம் கடலிலிருந்து வீசினால் வெப்பநிலை குறைவாக இருக்கும். தரைக்காற்று வீசினால் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களை கோடை காலம் என்று சொல்கிறோம். மே மாதத்தில் மட்டும் இயல்பைவிட சற்று குறைவாக இருக்கும். இது சராசரி. சில நாட்களில் இயல்பைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் வழு, திசை வேகம் பொருத்து வெப்பநிலை மாறும்.
மேலும் படிக்க | ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்... எப்போது தென்படுகிறது பிறை?
காலை 10 மணிவரையிலும், அதன் பின்பு மாலை 3 மணிக்கு பிறகும் வெளியே செல்வது நல்லது. இடைப்பட்ட அந்த நேரங்களில் சூரிய கதிர்கள் நேரடியாக தாக்கும். அதனால் பாதிப்பு ஏற்படும்” என்றார். மே மாதத்தில் வெப்பத்தின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | மாணவ, மாணவிகளின் வளர்ச்சி: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முன்னெடுப்புகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR