சென்னை: தமிழகத்தில் மே 7 ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் இரண்டே நாளில் மூடப்பட்டது. அதனை திறக்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தான் தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையில், டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை குறித்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் மூலம் விற்பனை மேற்கொள்வது. ஆனால் ஆன்லைன் விற்பனை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வராதா நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு செய்தி மிகவும் வைரலாகி வருகிறது.
அதாவது ஆன்லைனில் மது விற்பனையை ஆரம்பமாகிவிட்டது. அதற்கான லிங்க் இது தான்.. இதன் மூலம் மதுவகைகளை ஆர்டர் செய்யலாம் என்ற செய்தி வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் ஆன்லைனில் மது விற்பனை குறித்த செய்தி வெளியானதை அடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை தொடங்கிவிட்டது என்ற செய்தி உண்மை இல்லை. அங்கு பகிரப்படும் லிங்க் போலியானது என்று விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் திறக்கப்பட்டது. தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மதுபானம் வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் இருந்த பல போட்டோக்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் அரசின் முடிவை சரியானது அல்ல என பல தரப்பினரும் எதிப்பு தெரிவித்தனர். பெண்களும், பொதுமக்களும் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மே 7 ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் இரண்டி நாட்களில் மட்டுமே விற்பனை ஆனா மொத்தம் மதிப்பு ரூ.294.7 கோடி ரூபாய் ஆகும். முதல் நாளில் ரூ.172.59 கோடிக்கும், இரண்டாவது நாளில் ரூ.122 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இதனால் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்தா நீதிபதிகள், ஊரடங்கு காலம் இருக்கும் வரையும் மதுபானக்கடைகளை திறக்கக்கூடாது மற்றும் ஆன்லைனில் மது விற்பதை குறித்து அரசு ஆலோசிக்கலாம் என்று கூறி, கடந்த மே 8 அன்று மதுபானக்கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே COVID-19 ஊரடங்கு காலத்திற்கு மத்தியில், டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க மாநில அரசு எடுத்த முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் நேற்று தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி மற்றும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய பென்ச் விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று தள்ளி வைத்துள்ளனர்.