டிடிவி தினகரனுக்கு ஓட்டு கேட்கும் பாஜக மூத்த தலைவர்?...

டிடிவி தலைமையிலான அமமுக-விற்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 15, 2019, 11:39 PM IST
டிடிவி தினகரனுக்கு ஓட்டு கேட்கும் பாஜக மூத்த தலைவர்?... title=

டிடிவி தலைமையிலான அமமுக-விற்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்!

தனது தலைமையிலான விராத் இந்து சபையினரோடு கலந்து ஆலோசித்த பின், தினகரன் தலைமையிலான அமமுக-விற்கு வாக்களிக்குமாறு தமிழகத்தில் உள்ள தேசியவாதிகளுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"தமிழக நிலைமை குறித்து விராத் இந்து சபையினரோடு தீவிர ஆலோசனை மேற்கொண்ட பின்னர், தமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் தினகரன் தலைமையிலான அம்மா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஊழல் என எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று தான், இவர்களில் டிடிவி எவ்வளவோ பரவாயில்லை, நாட்டின் ஒற்றுமைக்காக நன்மை பயப்பார்" என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கட்சியின் மூத்த தலைவர் தங்கள் கூட்டணிக்கு எதிராக செயல்படும் ஒருவருக்கு வாக்கு கேட்பது அக்கட்சி தொண்டர்களிடேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News