Tamil Nadu Lok Sabha Election Result 2024 Live: சென்னையின் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் 4700 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 268 மேசைகளில் 321 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களிலும் 922 சிசிடிவி கேமிராக்களும், மூன்றடுக்கு பாதுகாப்பில் 1384 காவல்துறையினருடன் ஈடுபட்டுள்ளனர். லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை மொத்தம் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 15 டிவிகள் மூலம் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு 445 காவல்துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிப்படுவர். அதேபோல், வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 280 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 13 டிவி மூலமாக கண்காணிக்கப்படுகிறது. இம்மையத்தில் 447 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் எண்ணப்பட உள்ளது. இங்கு மொத்தம் 342 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும், 13 தொலைக்காட்சி அமைகப்படுள்ளது. 492 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
மொத்தமாக மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் 1,384 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல், மூன்று மையங்களிலும் மொத்தம் 922 சிசிடிவி கேமராக்கள் மற்றும்7 42 டிவிகள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் கண்காணிக்கப்பட உள்ளது. மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் 268 மேசைகளில் 321 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. நாடாளுமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் சுற்று மற்றும் மேசை விவரம் பின்வருமாறு:
மத்திய சென்னை:
84 மேசை
97 சுற்று
வட சென்னை:
107 சுற்று
84 மேசை
தென் சென்னை:
117 சுற்று
100 மேசை
மேலும் படிக்க | Dindigul Lok Sabha Election Result 2024: திண்டுக்கல்லில் பட்டாபிஷேகம் யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ