தொழிலாளர்கள் தினம் இன்றுநாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தமிழக மக்களுக்கு முதலமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்களது வாழ்த்து செய்தியில், மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் 'மே தின' வாழ்த்து செய்தி. pic.twitter.com/qS4Vcpl5rD
— AIADMK (@AIADMKOfficial) April 30, 2021
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் கேடயமாகவும், போர்வாளாகவும் திமுக எப்போதும் இருக்கும் என தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது வாழ்த்து செய்தியில், திராவிட இயக்கத்தின் வெற்றிக்காகவும், உழைக்கும் தோழர்களின் உரிமைக்காகவும் பாடுபடும் சக்திகளை ஒன்று திரட்டி, மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க உழைப்போம் என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது வாழ்த்து செய்தியில், தொழிலாளர்களின் உரிமை காக்க என்றென்றும் குரல் கொடுக்கும் இயக்கமாக பாஜக திகழ்கிறது என கூறியுள்ளார்.
அனைவருக்கும் உளம் கனிந்த இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !!!!
.
.
.
.#LabourDay #LabourDay2021 #InternationalLabourDay #MayDay #MayDay2021 pic.twitter.com/bX4pqpZYrI— Dr.L.Murugan (@Murugan_TNBJP) April 30, 2021
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது மே தின செய்தியில், கொரோனா தொற்றினால் வேலை இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் நிவாரண தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.
ALSO READ | May Day 2021: மே தினம், சர்வதேச உலக தொழிலாளர் தினம் இன்று
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR