ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஒரே விமானத்தில் ஆந்திராவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
பதவியேற்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜனை கண்டிக்கும் பாணியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி கேட்க செய்தியாளர்கள் காத்திருந்தனர்.
மேலும் படிக்க | அரசு பள்ளி அருகே அமர்க்களமாய் களைகட்டும் டாஸ்மாக் பார்: அவதியில் மாணவர்கள்
ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திப்பது போல போக்கு காட்டி செய்தியாளர்களை திசைதிருப்பி விட்ட தமிழிசை செளந்தர்ராஜன், விரைந்து சென்று காரில் ஏற முயன்றார். காரில் ஏற சென்ற தமிழிசையிடம் Is everything ok என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எல்லாம் ok என்பது போல Thumps up செய்தார் தமிழிசை.
அதன்பிறகு, உடனடியாக காரில் ஏறி கிளம்பினார். காரில் ஏறிய தமிழிசையிடம் அமித்ஷா உடனான உரையாடல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார் தமிழிசை செளந்தரராஜன்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக ஓரிரு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு, செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.
மேலும் படிக்க | தமிழிசை சவுந்திரராஜனை கோபமாக எச்சரித்த அமித் ஷா! பின்னணி இதுதான்!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது அமைச்சர்கள் பதவியேற்ற நிகழ்வில் அமித் ஷா, தமிழிசை சவுந்திர ராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது, மேடைக்கு வந்த தமிழிசை சவுந்திர ராஜன், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய நாயுடுவுடன் பேசிக்கொண்டிருந்த அமித்ஷா மற்றும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.
தமிழிசைக்கு வணக்கம் தெரிவித்த அமித் ஷா, பொதுவெளியில் அநாவசியமாக பேசக்கூடாது என ஆங்கிலத்தில் சொன்னார். தமிழிசை சவுந்திர ராஜனும் அந்த இடத்தில் சிரித்துக் கொண்டே விளக்கம்கொடுக்க, அதனை அமித் ஷா ஏற்கவில்லை என்பது அவரது முகத்தில் இருந்தே தெரிந்தது.
மேலும் படிக்க | பிரதமர் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ