நடிகர் ரஜினி அவர்களின் அரசியல் பயணம் குறித்து பல்வேறு விமர்சணங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ட்விட்டரில் #காலாவதியான_காலா எனும் ஹாஸ்டேக் ட்ரண்ட் ஆகி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.
இந்த போராட்டங்களுக்கு திரையுலகினரும் களத்தில் இறங்கி போராட தொடங்கிவிட்டனர். ஆனால் அரசியலில் இறங்கப்போவதாக தெரிவித்த நடிகர் ரஜினி அவர்கள் எந்த சலனமும் இன்றி மௌனம் காந்துவந்தார். இத்தகு செயல்களால் அவர் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 11-ஆம் நாள் சேப்பாக்கம் மைதானத்தில் இளைஞர்கள் காவல்துறையினரை தாக்கியது குறித்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார், இதனால் கடும் கோபமுற்ற இளைஞர்கள் ரஜினியின் மீதான கோபத்தினை அதிகமாக வெளிப்படுத்தினர்.
சமூகவலைத்தள பிரியர்கள், ரஜினியின் வரவிருக்கும் திரைப்படமாக காலா-விற்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுவருகின்றனர். ரஜினிக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு தற்போது ட்விட்டரில் ட்ரண்டாகவே மாறிவிட்டது. இதன் வெளிப்பாடாக தற்போது ட்விட்டரில் #காலாவதியான_காலா எனும் ஹாஸ்டேக் ட்ரண்ட் ஆகி வருகிறது.